1 2 3
அறிமுகம்

எம். ஜி. ஆர். மக்கள் கட்சி

மக்களுக்காக மக்களாட்சி நடத்திய பொன்மனச் செம்மல், புரட்சி தலைவர், ஏழைகளின் இதய தெய்வமாய் இன்றுவரை வாழ்ந்து வரும், எம்.ஜி.ஆர் அவர்களின் நல்லாட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்திட வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்க்காக துவக்கப்பட்டதுதான் எம். ஜி. ஆர். மக்கள் கட்சி.

எம்.ஜி.ஆர் அவர்களின் வளர்ப்பு தொண்டனாக, அரசியல் வாரிசாக வளர்ந்தவர்தான் திரு. எம்.ஜி.ஆர்.விஸ்வநாதன் M.A., B.L.,

எம்.ஜி.ஆர்.தான் இவரைப் படிக்க வைத்தார், சென்னை மாநகராட்சியில் பள்ளியில் நேரடியாக தலைமை ஆசிரியராகப் பணியில் அமர்த்தினார். எம்.ஜி.ஆரே திருமணமும் செய்து வைத்தார். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தலைமையாசிரியராக சிறப்பாக பணியாற்றி ஆயிரக்கணக்கான நல்ல மாணவர்களை இந்த சமுதாயத்த்திற்கு உருவாக்கி கொடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, 2012 ஆம் ஆண்டு தமிழக அரசால் ‘நல்லாசிரியர்’ விருது கொடுத்து கெளரவிக்கப்பட்டார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற பிறகு, எம். ஜி. ஆரின் உலகளாவிய தொண்டர்களின் விருப்பத்தின் பேரில், 2016 ஆம் ஆண்டு ‘அனைத்துலக எம். ஜி. ஆர். மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி, இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். கட்சியின் நிறுவன தலைவராக எம்.ஜி.ஆர். விஸ்வநாதன் பொறுப்பேற்றார்.

கட்சி துவங்கிய 2017 ஆம் ஆண்டே ஆர்.கே.நகர் தொகுதியில், ‘தென்னை மர சின்னத்தில்’ தேர்தலில் போட்டியிட்டார் எம்.ஜி.ஆர். விஸ்வநாதன்.

கட்சி நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க, 2019ஆம் ஆண்டு கட்சியின் பெயரை சுருக்கி, எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி என பதிவு செய்யப்பட்டது.

இளைஞர்களுக்கான வளர்ச்சி வளர்ச்சி முன்னெடுக்கவும், தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று முன்னணி மாநிலமாக திகழவும், ‘இல்லாமை நீங்கி, எல்லோருக்கும் வளமான வாழ்க்கை கிடைக்கவும், ஏற்றத்தாழ்வில்லா சமநீதி அரசு அமைக்கவும் இக்கட்சி உறுதி கொண்டுள்ளது.

தொடர்பு கொள்க

தலைமை அலுவலகம் : பிளாட் எண் 8, சத்யசாய் நகர் 89, வேப்பம்பட்டு சி.டி.எச் ரோடு, திருவள்ளூர் மாவட்டம் - 602024.

+91 98947 04428